ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் மறைவு
1 min read
Andhra Chief Minister Chandrababu Naidu’s younger brother passes away
17.11.2024
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு [வயது 72] காலமானார். இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 1994 சட்டப்பேரவை தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பணியாற்றியவர் ஆவார்.
கடந்த 3 நாட்கள் முன்னாள் மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.16) மதியம் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரரின் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘எனது சகோதரரும், சந்திரகிரி முன்னாள் எம்எல்ஏவுமான நாரா ராமமூர்த்தி நாயுடு நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.