தெலுங்கானாவில் எலக்ட்ரிக் வாகனத்துக்கு 100 சதவீத வரி விலக்கு
1 min read
100 percent tax exemption for electric vehicles in Telangana
18.11.2024
மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மக்களிடேயே ஊக்குவிக்கும் முயற்சியாக தெலங்கானா அரசின் புதிய அறிவிப்பு இன்று முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. மின்சார வாகனங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் விதமாக 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வர்த்தக பயன்பாட்டு பயணிகள் வாகனங்கள், மின்சார ஆட்டோ ரிக்சா, மின்சாரத்தில் இயங்கும் இலக ரக சரக்கு வாகனங்கள், டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
2026-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தெலங்கானாவில் வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இந்த 100 சதவீத விலக்கு பொருந்தும். தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு மட்டும் வாழ்நாள் வரி, கட்டண விலக்கு அமலில் இருக்கும்.