தென்காசியில் 3-வது நாள் புத்தகத் திருவிழா- ஆட்சித்தலைவர் பங்கேற்பு
1 min read
3rd Day Book Festival in Tenkasi – Governor’s participation
18/11/2024
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் 3வது பொதிகை புத்தகத்திருவிழாவின் 3 வது நாள் புத்தகத்திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 3- வது நாள் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் / பேச்சாளர்கள் கலைஞர்கள் மற்றும் பள்ளி.கல்லூரி மாணவ. மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர். நினைவுப்பரிசு மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது :-
மூன்றாவது நாள் புத்தகத்திருவிழா நிகழ்ச்சியாக, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இராஜபாளையம் உமாசங்கர் குழுவினரின் தமிழிசையும் இசைத்தமிழும் என்ற நிகழ்ச்சி. எழுத்தாளர் அகிலாண்ட பாரதியின் வரலாற்றுச் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொல்லின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் சிறப்புரை.ஆற்றினார்.
கலைமாமணி கவிஞர் கலாப்ரியாவின் கவியும் காட்சியும் என்ற தலைப்பில் சிறப்புரை, சாகித்திய அகாதமி விருதாளர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் மரபும் மாண்பும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயசந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால், புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் பானுப்பிரியா மற்றும் அரசு உயர்அலுவலர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ. மாணவிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.