சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற முடிவு
1 min read
Decision to relocate hundreds of bus stops in Chennai
18.11.2024
சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது
இதன்படி பஸ் நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆய்வுப் பணிகளைத் தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிராட்வே – முகப்பேர் , வடபழனி – தரமணி இடையேயான வழித்தடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்து, போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றப்படவில்லை என்றும், சீரான இடைவெளியில், போக்குவரத்தை எளிதாக்க, பஸ் நிறுத்தங்கள் மாற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி மூலமாக, பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக முதற்கட்ட ஆய்வறிக்கை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.