வ.உ.சி.யின் தியாக வாழ்வை வணங்குவோம்: முதல்-அமைச்சர் பதிவு Let us worship the sacrificial life of VUC: Prime Minister’s Record
1 min read
18.11.2024
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்ப் பற்று – ஈகையுணர்வு – விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.