அச்சன்கோவிலில் பக்தர்களை பாதுகாக்க காவல் உதவி மையம்
1 min read
Police assistance center to protect devotees in Achan temple
18.11.2024
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவும் வகையில் அச்சன்கோவிலில் காவல் உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலய வளாகத்தில் மண்டல மகர கால திருவிழாக்களை முன்னிட்டு அதிகமாக வரும் கூட்டத்தை பாதுகாக்க மற்றும் பக்தர்களுக்கு உதவும் பொருட்டு அச்சன்கோவில் காவல் நிலையம் சார்பாக காவல் உதவி மைய்யம் தொடங்கபட்டது.. புனலூர் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் அவர்கள் தலைமையில் ஆரியங்காவு பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சுரேஷ் பாபு.. அச்சன்கோவில் பஞ்சாயத்து மெம்பர் சானு.. கோவில் உபதேச கமிட்டி தலைவர் உண்ணி பிள்ளை.. திருஆபரண கமிட்டி தலைவர் தென்காசி ஏஜிஎஸ். ஹரிஹரன் குருசாமி ஆகியோர் விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.. உடன் மண்டல தலைவர் கீதா சேச்சி.. அச்சன்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ண குமார் அவர்கள்.. இந்த காவல் உதவி மைய்யம் இந்த மண்டல மகர காலம் முழுவதும் செயல்படும் என அச்சன்கோவில் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.