ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
1 min read
Teenager commits suicide after losing money in online gambling
18.11.2024
தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதில் அதிக அளவில் பணத்தை இழந்தார். இதனால் அதனை ஈடுகட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனையும் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதில் அவர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார்.
இதற்கிடையே உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரபாகரன் நேற்று போடிக்கு வந்திருந்தார். அப்போது அங்குள்ள தனது தாய் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.