வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
1 min read
VU Chidambaranar Memorial Day: Tribute on behalf of Tamil Nadu Govt
18.11.2024
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (18.11.2024) சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் மு.பா.அன்புச்சோழன் (மக்கள் தொடர்பு) மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.