வங்கக்கடலில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகரும்பெங்கல் புயல்
1 min read
Cyclone Fangal moving at a speed of 13 kmph in the Bay of Bengal
29.11.2024
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.
3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.
ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் சென்னைக்கு அருகில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
நாகையிலிருந்து தென்கிழக்கே 260 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 270 கி.மீ., தொலைவில் ஃபெங்கல் புயல் மையம் கொண்டுள்ளது.