புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
1 min read
Cyclone: Storm warning buoys hoisted at Tamil Nadu ports
29/11/2024
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகல் 2.30 மணியளவில் பெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புயல் எதிரொலியாக தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
- பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
- நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
- சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.