தென்காசியில் புதிய சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை- எஸ்.பி. வழங்கினார்
1 min read
SP issues appointment orders to new uniformed personnel in Tenkasi
29.11.2024
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருக்கு பணி நியமன ஆணையை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் வழங்கினார்.
2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் இருந்து புதிதாக தேர்வாகியுள்ள 42 நபர்கள் பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் தேர்வாகியுள்ள மீதமுள்ள 91 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் 15 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருக்கு பணி நியமன ஆணை இன்று தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஶ்ரீனிவாசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் பானுபிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.. முடிவில் பணிநியமன ஆணையை பெற்று கொண்ட இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தனர்.