அண்ணாமலை லண்டனில் படிப்பை முடித்து நாளை தமிழகம் திரும்புகிறார்
1 min read
Annamalai will return to Tamil Nadu tomorrow after completing his studies in London.
30.11.2024
லண்டனில் உள்ள ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக்கழகத்தில் ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பிலான படிப்பை பயில, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வானார். இதற்காக, கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம், அண்ணாமலை இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.
சர்வதேச அரசியல் படிப்பை பயின்று வந்த அதே காலக்கட்டத்தில், லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். மேலும் அங்குள்ள தமிழக மாணவர்களை சந்தித்து, அண்ணாமலை கலந்துரையாடினார்.
இந்த நிலையில், அவர் இன்று (சனிக்கிழமை) இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு, நாளை (டிசம்பர் மாதம் 1-ந் தேதி) அதிகாலை தமிழகம் வருகிறார். தமிழகம் திரும்பும் அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். மேலும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.