July 9, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

1 min read

Farmers’ Grievance Redressal Day meeting in Tenkasi

30.11.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், பேசியதாவது ;-

தென்காசி மாவட்டத்தில் 2024 2025 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை நெல் – 25574 ஹெக்டேர், சிறுதானியங்கள் 24048 ஹெக்டேர், பயறு வகைகள் 29322 ஹெக்டேர் பருத்தி 1656, கரும்பு 1128 ஹெக்டேர், எண்ணெய் வித்து – 1310 ஹெக்டேர், மலைப் பயிர்கள்- 13853 ஹெக்டேர், பழங்கள் 9854 ஹெக்டேர், காய்கறிகள் – 1601 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் 681 ஹெக்டேர், மருத்துவப் பயிர்கள் – 2 ஹெக்டேர், பூக்கள் 516 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. மழையளவு, நீர் இருப்பு விபரம், இடுபொருட்கள் இருப்பு விபரம் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான விபரங்களும் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஆலங்குளம் மற்றும் கடையம் வட்டார தோட்டக்கலைத் துறையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட திரளான விவசாயிகளும் கண்டு பயனடைந்தனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 238 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேளாண்மைத் துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மின்கலத் தெளிப்பான் ரூ. 2075/- மானியத்திலும் மற்றும் ஒரு பயனாளிக்கு துத்தநாக சல்பேட் ரூ. 250/- மானியத்திலும், தோட்டக்கலைத் துறை மூலம் கலைஞரின் அனைத்து கிரம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு பழத்தொகுப்பு செடிகள் ரூ.150/- மானியத்திலும் மற்றும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஊட்டச்சத்து தளை தொகுப்பு গ. 45/- மனியத்திலும், வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,04,000/- மானியத்தில் பவர் வீடர் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் .ச.மாகாதேவன், வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ச.கனகம்மாள், வேளாண்மை துணை இயக்குநர்(மத்திய மற்றும் மாநிலத் திட்டம்) (பொ) மு.உதயக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) மா. இளங்கோ, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, முதுநிலை மண்டல மேலாளர், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அ. ரியாஜ் அகமது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கு.நரசிம்மன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.