பாவூர்சத்திரம் மேம்பால பணிகள் 2-ந் தேதிதொடக்கம்- போக்குவரத்து மாற்றம்
1 min read
Pavurchatram flyover works to begin on the 2nd – Traffic diversion
30.11.2024
தென்காசி மாவட்டம்
பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நாளை மறுநாள் (டிச.2 ம் தேதி) தொடங்கவள்ளது. இதனால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரயில்வே தண்டவாளத்தின் மேலே மேம்பால பணிகள் வருகிற 2 ம் தேதி(நாளை மறுநாள்) தொடங்கப்படவுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது, அதன்படி டிச.2 ம் தேதி முதல் தென்காசியில் இருந்து ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஆசாத்நகரில் இருந்து கடையம், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கும், திருநெல்வேலியில் தென்காசி வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் அத்தியூத்து, சுரண்டை இலத்தூர் விலக்கு வழியாக தென்காசி, செங்கோட்டை செல்ல வேண்டும்.
அதே போல் தென்காசி நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மட்டும் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் வழியாகவும், திருநெல்வேலி நோக்கி செல்லும் மற்ற இலகுரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் செல்வவிநாயகபுரம் வடக்கு பிரிவு சாலையில் சென்று இரயில்வே சுரங்கப்பாதை, மேலப்பாவூர் சாலை வழியாக சென்று பிரதான சாலையில் இணைக்கும் மாற்று பாதையில் செல்வ வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
One attachment
• Scanned by Gmail