அமெரிக்காவில் தெலுங்கானா மாணவர் சுட்டுக் கொலை
1 min read
Telangana student shot dead in US
1.12.2024
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சாய் தேஜா நுகரபு (வயது 22). கடந்த 3 மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிப்பதற்காக சென்றுள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் காசாளராக பகுதிநேர பணியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மர்ம கும்பல் ஒன்று திடீரென வந்து, அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இதன்பின்பு, பெட்டியில் இருந்த பணம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு தப்பியோடியது.
இந்தியாவில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த தேஜா, எம்.பி.ஏ. படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில், ஆரியன் ரெட்டி (வயது 23) என்பவர் ஒரு வாரத்திற்கு முன் பிறந்த நாளை கொண்டாடும்போது துப்பாக்கியை தவறுதலாக சுட்டதில் பலியானார். இவரும் தெலுங்கானாவை சேர்ந்தவர் ஆவார்.