டெல்லியை நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள்
1 min read
Farmers march towards Delhi
2.12.2024
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம், புதிய வேளாண் சட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உள்ளிட்டு 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று டெல்லியை நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மகாமாயா மேம்பால பகுதியில் இருந்து டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியை தொடங்கவுள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லியின் பல பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சில்லா எல்லையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் டெல்லி-நொய்டா எல்லைக்கு அருகே உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.