ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சரானது ஏன்? – செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி
1 min read
Why did you take oath as a minister the day after getting bail? – Supreme Court questions Senthil Balaji
2/12/2024
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் அளித்திருப்பதால், மற்றவர்களும் இதுபோன்ற நிவாரணம் பெற முனைவார்கள் என்ற வாதத்தை நிராகரித்துவிட்டது.
நாங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கினோம், அடுத்தநாள் நீங்கள் சென்று அமைச்சராகிவிட்டீர்கள். தற்போது நீங்கள் தமிழக அமைச்சரவையின் முக்கிய அமைச்சர், எனவே, உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கும் எவர் ஒருவர் மீதும் தானாகவே ஒரு அழுத்தம் ஏற்பட்டுவிடக்கூடும். என்ன நடக்கிறது இங்கே? என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏஎஸ் ஓகா கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் தற்போதைய அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 471 நாள்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாகவும், அவரைத் தொடா்ந்து காவலில் வைத்திருப்பது அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையை மீறுவதாக இருப்பதாகவும் கூறி ஜாமீனில் விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.