பஹ்ரைனில் கைதான 28 தமிழக மீனவா்கள் 10-ந் விடுவிப்பு
1 min read
28 Tamil Nadu fishermen arrested in Bahrain released on the 10th
6.12.2024
பஹ்ரைனில் கைதான 28 தமிழக மீனவா்கள் டிசம்பா் 10-இல் விடுவிப்பு: ராபா்ட் ப்ரூஸ் எம்.பி.க்கு வெளியுறவு அமைச்சா் கடிதம்
பஹ்ரைன் கடல் பகுதியில் எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவா்கள் வருகிற 10-ந் தேதி விடுவிக்கப்பட உள்ளதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சி.ராபா்ட் புரூசுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடா்பாக ராபா்ட் ப்ரூஸுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் சமீபத்தில் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
28 இந்திய மீனவா்கள் கைது தொடா்பாக நீங்கள் எனக்குக்
செப்டம்பா் 20-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தீா்கள். பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ளஅந்த மீனவா்கள் டிச.10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவா்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவா்களை விடுவிப்பது தொடா்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, இந்தியா திரும்புவார்கள். இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவா்களுக்குச் செய்து வருகிறது.
அவா்கள் சீக்கிரம் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முன்னுரிமை அடிப்படையில் உள்ளூா் அதிகாரிகளுடன் தூதரகம் முடிப்பதற்கு வசதி செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே தகவலை பாஜக மாநில தலைவா் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் கடிதம்
வாயிலாக தெரிவித்துள்ளார்.
கைதான 28 தமிழக மீனவா்களை மீட்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு செப்டம்பா் 20-ம் தேதி அண்ணாமலை கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை சமீபத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் இதே பதிலை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இக்கடிதத்தை அண்ணாமலை தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளப் பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ளார்.