புயல் பாதிப்பு; திமுக எம்.பிக்கள் தலா ரூ. 1 லட்சம் வழங்க முடிவு
1 min read
Cyclone damage; DMK MPs decide to donate Rs. 1 lakh each
6.12.2024
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளையும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மற்றொருபக்கம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை தமிழக அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும், மாவட்ட நிர்வாகங்களும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது ஒருமாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கினார்.
இந்த நிலையில்,தி.மு.க. எம்.பி.க்களும் நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக டி.ஆர்.பாலு தகவல் தெரிவித்துள்ளார்.