வாணியம்பாடி ரயில் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி பலி
1 min read
Vaniyambadi railway station female sub-inspector killed after being hit by train
6/12/2024
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மேரி ஸ்டெல்லா. இவர் சென்னை உயர்நீதிமன்றம் செல்லவதற்காக வாணியம்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத் விரைவு ரயில் மோதி படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கு இருந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.