சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
1 min read
Elderly man gets 10 years in prison for sexually assaulting girl
7.12.2024
கடந்த 2018-ம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசார் ராஜேந்திரன் (தற்போது வயது 78) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை சிவகங்கை போக்சோ சிறப்பு கோர்ட்டு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட முதியவர் ராஜேந்திரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.