சென்னை முடிச்சூரில் ஆம்னி பஸ் நிறுத்துமிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min read
MK Stalin inaugurated the Omni bus stand at Mudichur, Chennai
7.12.2024
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.
தனியார் ஆம்னி பஸ்களும் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டு வருவதால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
இதனால்,ஆம்னி பஸ் உரிமையாளா்கள் கோரிக்கையை ஏற்று, வண்டலூர் வெளிவட்டச் சாலை முடிச்சூர் அருகே, 5 ஏக்கா் பரப்பில் ஒரே நேரத்தில் 117 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு இந்த தனியார் ஆம்னி பஸ் நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநா்கள், கிளீனா்கள் என 100 போ் தங்கும் அளவுக்கு இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பஸ் நிறுத்துமிடத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.