தென்காசியில் மாவட்ட இளையோர் கலை விழாவில் பரிசு பெற்றவர்கள் விவரம்
1 min read
Details of the prize winners at the District Youth Arts Festival in Tenkasi
9.12.2024
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென்காசி மாவட்ட நேரு யுவ கேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது.
அதன்படி இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இத்தொடக்க விழாவிற்கு மாவட்ட இளையோர் அலுவலர் எல்.ஞானசந்திரன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவிற்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தார். அப்போது மாணவ மாணவிகளின் இடையே விளையாட்டின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அனைத்து விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
இந்த விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசும்போது போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் போட்டிகளில் கலந்து கொள்வதே மிக சிறப்பு எனவும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் தங்கள் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டு வந்து மாநில அளவிலும் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்கள்.
மேலும் தொடர்ந்து நடைபெற்ற கைப்பேசி புகைப்பட போட்டியில் முதல் பரிசாக பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த சுதர்சன் ரூ.2500 பெற்றார். இரண்டாம் பரிசாக இலஞ்சி பாரத் மாண்டிசெரி மெட்ரிக் பள்ளியை சார்ந்த சென்பகநாதன் ரூ.1500 பெற்றார். மூன்றாம் பரிசாக இலஞ்சி பாரத் மாண்டிசெரி மெட்ரிக் பள்ளியை சார்ந்த பிரபு சுதர்சன் ரூ.1000 பெற்றார். இளம் எழுத்தாளர் போட்டி – கவிதை போட்டியில் முதல் பரிசாக இலஞ்சி பாரத் மாண்டிசெரி மெட்ரிக் பள்ளியை சார்ந்த தனஸ்ரீ சக்தி ரூ.2500 பெற்றார். இரண்டாம் பரிசாக பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த தர்ஷனா ரூ.1500 பெற்றார். மூன்றாம் பரிசாக இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரியை சார்ந்த கீதா ரூ.1000 பெற்றார். பிரகடன பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த திருமால் தினேஷ் ரூ.5000 பெற்றார்.
இரண்டாம் பரிசாக ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியை சார்ந்த முத்து சங்கரி ரூ.2500 பெற்றார். மூன்றாம் பரிசாக கடையநல்லூர் அரசு கலை (ம) அறிவியல் கல்லூரியை சார்ந்த இளவரசன் ரூ.1500 பெற்றார். இளம் கலைஞர் போட்டி- ஓவியம் போட்டியில் முதல் பரிசாக இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரியை சார்ந்த விஜய பிரியா ரூ.2500 பெற்றார். இரண்டாம் பரிசாக இலஞ்சி பாரத் மாண்டிசெரி மெட்ரிக் பள்ளியை சார்ந்த வனஜா ஸ்ரீ ரூ.1500 பெற்றார். மூன்றாம் பரிசாக சி.எஸ்.ஐ ராஜா அன்னபாக்கியம் கல்லூரியை சார்ந்த நந்தினி ரூ.1000 பெற்றார். அறிவியல் கண்காட்சி – தனி நபர் போட்டியில் பரிசாக இலஞ்சி பாரத் மாண்டிசெரி மெட்ரிக் பள்ளியை சார்ந்த ஜெயதர்ஷன் ரூ.3000 பெற்றார். இரண்டாம் பரிசாக இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரியை சார்ந்த சிவகாமி ரூ.2000 பெற்றார். மூன்றாம் பரிசாக இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரியை சார்ந்த ஜனா ரூ.1500 பெற்றார். அறிவியல் கண்காட்சி- குழுப் போட்டியில் முதல் பரிசாக பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த இஷாந்த் (ம) குழுவினர் ரூ.7000 பெற்றனர்.
இரண்டாம் பரிசாக சி.எஸ்.ஐ ராஜா அன்னபாக்கியம் கல்லூரியை சார்ந்த சகாயா (ம) குழுவினர் ரூ.5000 பெற்றனர். மூன்றாம் பரிசாக செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த ரோகித் (ம) குழுவினர் ரூ.3000 பெற்றனர். கலைத்திருவிழா – குழு நடனப்போட்டியில் முதல் பரிசாக இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரியை சார்ந்த கார்த்திகா (ம) குழுவினர் ரூ.7000 பெற்றனர். இரண்டாம் பரிசாக வாசுதேவநல்லூர் வின்வே சமுதாயக் கல்லூரியை சார்ந்த சுபாஷினி (ம) குழுவினர் ரூ.5000 பெற்றனர். மூன்றாம் பரிசாக இலஞ்சி பாரத் மாண்டிசெரி மெட்ரிக் பள்ளியை சார்ந்த குமார ஸ்ரீ (ம) குழுவினர் ரூ.3000 பெற்றனர்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் இராபர்ட் புரூஸ் அவர்கள் தலைமையாற்றி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாரத் கல்வி குழுமத்தின் சேர்மன் அ.மோகன கிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். இப்போட்டியில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் இறுதியாக மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் ச.ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார்.