ஈரானில் ஹிஜாப் அணியாததால் பாடகி அஹமதி கைது
1 min read
Singer Ahmadi arrested in Iran for not wearing hijab
15.12.2024
ஈரானில் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் ஈரான் பாடகியான பரஸ்டூ அஹமதி (வயது27) ஆன் லைனில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இதில் அவர் நீண்ட கருப்பு ஸ்லீவ்லெஸ் மற்றும் காலர் இல்லாத ஆடையை அணிந்து இருந்தார். அவருடன் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
முன்னதாக அந்த வீடியோவில், அவர், எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாத தால் பாடகி பரஸ்டூ அஹமதியை போலீசார் கைது செய்து உள்ளனர். வடக்கு மாகாணமான மஸந்தரானின் தலை நகர்சாரி சிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இசைக்குழுவில் உள்ள இசொஹைல் பாகி நசிரி, எஹ்சான் பெய்ராக்தார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.