July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

விருப்பமான நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து

1 min read

Switzerland removes India from its list of preferred countries

15.11.2024
இந்தியாவை தங்களின் விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதனால் அங்கு வணிகம் மேற்கொண்டிருக்கும் நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து இந்தியவிலும், இந்திய நிறுவனங்களும் அந்நாட்டிலும் வர்த்தகம் செய்து வருகின்றன. சுவிட்சர்லாந்து சட்டப்படி மற்ற நாட்டு நிறுவனங்கள் 10 சதவீதம் வரியை செலுத்த வேண்டும்.

ஆனால் இந்தியா போன்று விருப்ப பட்டியலில் இருக்கும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 5 சதவீதம் வரியை செலுத்தினால் போதுமானது. இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர். இந்த விருப்ப பட்டியலிலிருந்துதான் தற்போது இந்தியாவை அந்நாடு நீக்கியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனமான ‘நெஸ்லே’ பொருட்கள் இந்தியாவில் அதிக புழக்கத்தில் உள்ளன. அதில் குறிப்பாக மேகி நூடுல்ஸ் அதிக விற்பனை ஆகும் பண்டமாக இருந்தது.
ஆனால் உணவுப் பொருளான மேகி நூடுல்ஸ் -இல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயனம் கலந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மேகி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

ஆனால் அதிக ரசாயனம் கலக்கவில்லை என கூறி நெஸ்லே நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
வெகு காலமாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசின் முடிவு சரிதான் என்ற தீர்ப்பளித்தது. இதனால் குமைச்சலில் இருந்த சுவிட்சர்லாந்து தற்போது இந்த வேலையை பார்த்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அன்றைய தேதி முதல் அந்நாட்டில் வணிகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.