இங்கிலாந்தில் இந்தியரை கொன்ற வழக்கில் 12 வயது சிறுமி கைது
1 min read
12-year-old girl arrested for killing Indian man in England
17/12/2024
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் பீம் சென் கோலி. இந்திய வம்சாவளியான இவர் கடந்த செப்டம்பர் மாதம் லெய்செஸ்டர் பூங்காவுக்கு தனது செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் கோலியை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனிடம் நடத்திய விசாரணையில் 12 வயது சிறுமியும் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. எனவே தற்போது அந்த சிறுமியையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதுதொடர்பா போலீசார் கூறுகையில், “செப்டம்பரில் பீம் கோலி இறந்ததைத் தொடர்ந்து, மற்றொரு நபராக 12 வயது சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்ட காரணங்களுக்காக பெயரிட முடியாத சிறுமி மீது ஆணவக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.