மத்திய பிரதேசத்தில் பிச்சை போட்டால் வழக்குப்பதிவு
1 min read
Begging in Madhya Pradesh: Case registered
17.12.2024
மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்தூர். நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7ஆவது முறையாக முதலிடம் பெற்ற நகரமாக இருக்கிறது இந்தூர். இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக இந்தூரை மாற்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்தூர் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறியதாவது:- “இந்தூரில் பிச்சை எடுப்பதை தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரசாரம் இந்த மாத இறுதி வரை தொடரும்.
வரும் ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.