பாவூர்சத்திரத்தில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
1 min read
Public opposes construction of cell phone tower in Pavurchatram
17.12.2024
தென்காசி அருகே பாவூர்சத்திரம் காமராஜர் நகர் பகுதியில்
பள்ளியின் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியின் மிக அருகாமையில் செல்போன் டவர் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காமராஜர் நகர், பனையடிப்பட்டி, செட்டியூர் உள்ளிட்ட சிறு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர்.
குறிப்பாக, செல்போன் டவரானது பள்ளியின் அருகே அமைப்பதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கதிர்வீச்சு பாதிப்பால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறி தற்போது அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து மனு கொடுத்துள்ள சம்பவம் பபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
One attachment
• Scanned by Gmail