சவுக்கு சங்கர் மீண்டும் கைது
1 min read
Savukku Shankar arrested again
17.12.2024
கடந்த மே மாதம் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் இருந்தபோது அவரது கார் மற்றும் உதவியாளரிடம் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராம் பிரபு, ராஜரத்தினம், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்கான காரணம் குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். ஆனால் மனுவை நீதிபதி செங்கமலச்செல்வன் ஏற்க மறுத்ததோடு சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து விசாரணையை 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து தேனி மாவட்ட போலீசார் இன்று மீண்டும் கைது செய்துள்ளனர். கஞ்சா வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.