இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் 30 பேருக்கு கவுரவ விருது- மன்னர் சார்லஸ் வழங்குகிறார்
1 min read
King Charles to award honorary awards to 30 people of Indian origin in UK
1.1.2025
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி விளையாட்டு, சுகாதாரம், கல்வித்துறை மற்றும் தன்னார்வ சேவை ஆகியவற்றில் முன்மாதிரியாக இருப்பவர்களுக்கு கவுரவ விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான கவுரவ விருதை பெறுபவர்களின் பட்டியலை இங்கிலாந்து மந்திரிசபை வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய வம்சாவளியினர் 30 பேருக்கு இந்த கவுர விருது வழங்கப்பட உள்ளது. பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மன்னர் சார்லஸ் விருது வழங்கி கவுரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.