2024-ம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு- இந்திய வானிலை ஆய்வு மையம்
1 min read
2024 will be the hottest year on record – India Meteorological Department
2.1.2024
இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக 2024-ம் ஆண்டு அமைந்துள்ளது.
சமீப காலமாக காலநிலை மாற்றத்தால் ஆண்டு சராசரி காற்றின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 2024-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் சராசரியாக தரைக்காற்றின் வெப்பநிலை என்பது நீண்டகால சராசரியைவிட அதிகமாகப் பதிவானது. இது கடந்த 1901 – 2020 காலகட்டத்தில் பதிவானதை விட 0.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டு வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் 2025ம் ஆண்டும் வெப்பம் மிகுந்த ஆண்டாகவே இருக்கும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 2025 ஜனவரியில் இயல்பைவிட கூடுதலாக வெப்பநிலை நிலவும். வட மேற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் மத்திய பகுதிகள் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.