சிறையில் கைதிகளுக்கு சாதி பாகுபாடு கூடாது – உள்துறை அமைச்சகம் உத்தரவு
1 min read
There should be no caste discrimination against prisoners in prison – Home Ministry orders
2.1.2025
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகளும், மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியும், மூன்று பெண்கள் தனிச்சிறைகளும், மாவட்ட சிறைகள், திறந்த வெளிச் சிறைகள் மற்றும் கிளைச்சிறைகள் என 138 சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்குள் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளன. அதன்படி, சிறையில் கைதிகளுக்குள் இடையே சாதி ரீதியிலான பாகுபாடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைத்துறை டிஜி, ஐஜிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சாதி ரீதியிலாக கைதிகள் வகைப்பாடு செய்யக்கூடாது. சாதி அடிப்படையில் சிறையில், கைதிகளுக்கு வேலை வழங்கக் கூடாது. சிறையில் கழிவறை, கழிவு நீர் ஓடை ஆகியவற்றை சுத்தம் செய்ய கைதிகளை அனுமதிக்கக் கூடாது என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.