வங்காள தேசத்தில் 18 கோடி பேர் ஓட்டுரிமை பறிப்பு
1 min read
18 crore people in Bangladesh disenfranchised – Election Commission concerned
6.1.2025
வங்கதேசத்தில் 18 கோடி மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டாக்காவில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் முயற்சிக்கு முன்னதாக, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி திட்டத்தை, வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் நசீர் உதின் நேற்று துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
நாட்டில் 18 கோடி மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காண்பதை தேர்தல் ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை மீட்டெடுப்பதில் ஆணையத்தின் உறுதிப்பாடு வலுவானதாக உள்ளது. அவர்களது இழப்பின் வலியை நாங்கள் அகற்ற விரும்புகிறோம்.
நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதற்கான தகவல் சேகரிப்பு ஜனவரி 20ம் தேதி தொடங்க உள்ளது.
எங்களின் முதன்மையான குறிக்கோள் நியாயமான மற்றும் நம்பகமான தேர்தலை நடத்துவதே.
இவ்வாறு நசீர் உதின் பேசினார்.