டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி்; வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி
1 min read
Delhi Assembly elections on February 5; counting of votes on 8
7/1/2025
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி.
இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 10-ந்தேதி தொடங்கும். 17-ந்தேதி வேட்புனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை 18-ந்தேதி நடைபறும்.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதியாகும்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் அமைக்கப்படும்.
85 வயதை கடந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம்.
வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.
நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.
டெல்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர். குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது. ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை.
தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.
2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.
படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.