கவர்னரை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
1 min read
DMK protests against the Governor
7.1.2025
சட்டசபை உரையை புறக்கணித்த கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், கனிமொழி என்.வி.என்.சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 3,000 பேர்மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.