அமெரிக்காவில் முதல் முறையாக பறவை காய்ச்சலால் ஒருவர் சாவு
1 min read
First bird flu death in the US
7.1.2025
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் பறவை காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு சமீபத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிக தொற்று தன்மை கொண்ட எச்5.என்1. ரக வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனை லூசியானா மாகாண சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர் தவிர, அமெரிக்காவில் வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என்று லூசியானா மாகாண சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்திருப்பதாக லூசியானா மாகாண சுகாதார துறை தெரிவித்துள்ளது.