சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பிரசாந்த் கிஷோர் ஐ.சி.யுவில் அனுமதி
1 min read
Prashant Kishore, who was on a hunger strike until death, is admitted to the ICU
7.1.2025
ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் , பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டார்
பீகார் அரசுத் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார். பாட்னாவில் காந்தி மைதானத்தில் ஜனவரி 2 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த வார் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக அவர் மீது போலீஸ் குற்றம்சாட்டியது.
அந்த இடத்தில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடத்த பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் நீதிமன்றத்தின் நிபந்தனையற்ற ஜாமீனில் பிரசாந்த் கிஷோர் வெளிவந்தார். இந்நிலையில் இன்று [செவ்வாய்க்கிழமை] நீரிழப்பு மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலையில் பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சில மருத்துவப் பிரச்சனைகளை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டியுள்ளது. அவர் தொற்று மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார். அவர் பலவீனமாகவும் அசௌகரியமாகவும் இருக்கிறார் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
வினாத்தாள் கசிந்ததாக கடந்த மாதம் நடத்தப்பட்ட பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, சிவில் சர்வீஸ் தேர்வர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களில் கிஷோர் தன்னை இணத்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.