டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டல்: பீதியில் அரசு ஆசிரியை தற்கொலை
1 min read
Threatened with digital arrest: Government teacher commits suicide in panic
7.1.2025
டிஜிட்டல் கைது மோசடியால் பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்சில் சேர்ந்த அரசு கெஸ்ட் ஆசிரியர் ரேஷ்மா பாண்டே [35 வயது] கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விஷம் அருந்தி உயிரிழந்தார்.
ஆசிரியை அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறி இணைய மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் கைது செய்யபோவதாக அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ரஸ்னா தாக்கூர் தெரிவித்தார்.
மோசடிக்காரர்கள் அவரிடம் பணம் கேட்டனர். அவர் விஷத்தை உட்கொண்ட பிறகு, அவரது உறவினர்கள் அவரை ரேவாவில் உள்ள சஞ்சய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் மைத்துனர் வினோத் பாண்டே கூறுகையில், சைபர் மோசடி செய்பவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 22,000 மற்றும் ரூ. 5,500 தொகையை ஆசிரியை பரிமாற்றம் செய்ததாகக் கூறினார். மேலும் பணத்தை செலுத்தாவிட்டால் டிஜிட்டல் கைது செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர், இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக தெரிவித்தார்.
சைபர் மோசடி, டிஜிட்டல் கைது மற்றும் பிற வகையான இணைய மோசடிகள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியை தற்கொலை சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது