தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்சாலை மறியல்- 300 பேர் கைது
1 min read
Rural Development Department officials block road in Tenkasi – 300 arrested
8.1.2025
தென்காசியில் தமிழ்நாடு
வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் நீண்ட கால நிலுவைக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு. மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் சு.பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.
தென்காசி மாவட்ட பொருளாளர் மா.மணிக்கவாசகம், மாவட்ட துணை தலைவர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி மாவட்ட செயலாளர் பீ.ராஜசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஊரக வளர்ச்சித் துறை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி நாயனார், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சலீம், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் தலைவர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கோவில் பிச்சை, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் துரைசிங், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் துறை டேனியல், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
போராட்டக் குழுவினர் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளருக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். உதவி செயற் பொறியாளர் நிலை பதவி உயர்வினை மேலும் காலதாமதம் இன்றி வழங்கிட வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு 20% சதவீத பதவி உயர்வு வழங்குவதில் இயக்குனர் அலுவலகத்திலும் தலைமை செயலகத்திலும் கடைபிடிக்கும் வீண் கால தாமதங்களை முற்றாக கைவிடுதல் மற்றும் 20 சதவீத மற்றும் 10 சதவீதம் இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கும் அதிகாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்க வேண்டும்
தமிழக முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளில் ஒன்றான கடந்த கால வேலை நிறுத்த நாட்களை வரன்முறைப்படுத்த வேண்டும்
கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் தகராட்சிகளாக நாம் உயர்த்தும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை மாநில மாவட்ட வட்டார அளவில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட இணைச் செயலாளர் அன்பரசு அனைவருக்கும் நன்றி கூறினார்.
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்த ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் 50 பெண்கள் உட்பட 300
பேர்களை தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.