தென்காசி மாவட்டத்தில் 4,74,888 குடும்பத்துக்கு பொங்கல் பரிசு
1 min read
Collector launches Pongal gift collection in Tenkasi
10.1.2025
தென்காசி வீட்டு வசதி வாரியத்தில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி வீட்டு வசதி வாரியத்தில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ராணிஸ்ரீகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கி துவக்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது.
தமிழர் திருநாளாம் தைத்திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1கிலோ பச்சரிசி 1கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நடத்தும் வீட்டு வசதி வாரிய நியாய விலைக்கடையில் தலா ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை, முழுகரும்பு மற்றும் வேட்டி சேலை ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 658 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,74,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 178 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், முதுநிலை மண்டல மேலாளர் ரியாஜ் அகமது, தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அனிதா, துணைப்பதிவாளர்கள் பூர்விசா, ப.கோபிநாத், கூட்டுறவு சார்பதிவாளர்கள் மு.மாரியப்பன், இரா.ஸ்ரீவித்யா, பண்டக சாலை செயலாட்சியர் இரா.இராஜ், மேலாளர் மாரியப்பன் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.