தமிழக மீனவர்களுக்கு 23-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
1 min read
Tamil Nadu fishermen remanded in judicial custody till 23rd
10.1.2025
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர், அவர்கள் இலங்கையின் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு, தமிழக மீனவர்களை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து ஊர்க்காவல் படை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.