தோரணமலையில் வில்லிசையோடு பொங்கல் விழா
1 min read
Pongal festival with violins in Thoranamalai
13.1.2025
தோரணமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று காலையில் கிரிவலம் நடைபெறும். மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மலையை சுற்றி வந்தனர். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இதனை அடுத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக வண்ணக்கோலம் போடப்பட்டு அங்கு பதுப்பானை வைத்து பெண்கள் பொங்கல் வைத்தனர். அதே நேரம் அரியப்புரம் குழுவினரின் வில்லிசை நடந்தது. மேலும் சிறுவர்களின் பாரம்பரிய விளையாட்டான சில்லாங்குச்சி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் மதியம் வழக்கம் போல் அன்னதானமும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.
/