சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார்: கவர்னர் ஆர்.என்.ரவி
1 min read
Vallalar is the one who restored Sanatana Dharma: Governor R.N. Ravi
13.1.2025
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற ஜீவகாருண்யா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள். இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும். தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது.
வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர்கள் அழிக்கப் பார்த்த தமிழையும் சமஸ்கிருதத்தையும் வள்ளலார் மீட்டெடுத்தார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.