சென்னை ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை
1 min read
IIT Chennai student sexually harassed
15.1.2025
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவர் தேநீர் கடைக்கு சென்றபோது பாலியல் தொல்லை ஏற்பட்டு உள்ளது என போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த மாணவி களிக்குன்றம் சாலையிலுள்ள தேநீர் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில் அந்த நபர், உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவர் என தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தொடக்கத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பொங்கல் பண்டிகையான நேற்று புதுச்சேரியில் மற்றொரு சம்பவம் நடந்தது.
புதுச்சேரியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது.
அந்த மாணவி வடமாநிலத்தில் இருந்து படிக்க வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் இருந்த ஆண் நண்பரை 3 பேர் கொண்ட கும்பல் விரட்டியடித்து விட்டு, மாணவியிடம் அத்துமீறியுள்ளது. அந்த 3 பேரில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு உள்ளது.