கவிஞர் கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min read
Poet Kabilan receives Mahakavi Bharathiyar Award: M.K. Stalin presents it
151.2025
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் 2-வது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசின் விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமுக்கு வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த எல்.கணேசனுக்கு வழங்கப்பட்டது.
2024ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது ரவிக்குமார் எம்.பிக்கு வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்து வாவாசிக்கு வழங்கப்பட்டது. கவிஞர் கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் விருது பேரொளி பொன். செல்வகணபதிக்கு வழங்கப்பட்டது.
தமிழ்தென்றல் திரு.வி.க விருது- மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கு வழங்கப்பட்டது. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- வே.மு.பொதியவெற்பனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுடன் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.