பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு
1 min read
Stone pelting on Pothikai Express train
15/1/2025
சென்னையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை அதிவிரைவு ரெயில் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை நோக்கி சென்று வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ரெயிலின் பி-2 ஏ.சி. பெட்டி மீது மர்ம நபர்கள் கல் வீசியுள்ளனர்.
இதில் ஏ.சி. பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் இது குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இரவு 10.50 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில் வந்ததும் அங்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் உடைந்த ஏ.சி. பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை தற்காலிகமாக சரி செய்தனர்.
இதன் பிறகு அந்த ரெயில் அங்கிருந்து சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடு்ம் அவதி அடைந்தனர். ரெயில் மீது கல்வீசியது யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.