தி.மு.க.வில் இணைந்தார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா
1 min read
Actor Sathyaraj’s daughter Divya joins DMK
19.1.2025
நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் இன்று முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நடிகர் சத்யராஜ் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது மகள் திவ்யா இன்று தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்-அமைச்சர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.,வில் இணைந்தார்.
அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.