தென்காசி மாவட்டத்தில் கண்காணிப்பு இளம் வல்லுநர் பணிக்கு தொகுப்பூதியம்-கலெக்டர் தகவல்
1 min read
Collector announces lump sum payment for young surveillance professionals in Tenkasi district
19.1.2025
தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்
.ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை. 03.01.2025 இன் மூலம் அரசின் முக்கியத் திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பு அலகு மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். மாவட்ட கண்காணிப்பு அலகு ஒவ்வொரு மாதமும் துறைவாரியான தரவுகள் சேகரித்து முக்கியமான அரசு திட்டங்களின் பகுப்பாய்வு அறிக்கையினை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கும். இவ்வலகில் வெளிசேவை முறையில் இளம் வல்லுநர் தற்காலிக பணியிடம் ஒன்று மட்டும் ஒரு வருட காலத்திற்கு மாதம் ரூ. 50,000/- தொகுப்பூதியம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
இப்பணிக்கான கல்வித் தகுதி. அனுபவம். விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகள் குறித்த https://tenkasi.nic.in இணையதள முகவரியில் உள்ளது. இணையதள முகவரியில் உள்ள மாதிரி படிவத்தில் சுயவிவரத்தினை பூர்த்தி செய்து புள்ளி இயல் துணை இயக்குநர். மாவட்ட புள்ளி இயல் அலுவலகம், என்.ஜி.ஓ.பி.காலனி, ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம், திருநெல்வேலி-07 என்ற முகவரிக்கு அல்லது [email protected] இல் 27.01.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.