தென்காசி அருகே உள்ள மேட்டூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
1 min read
Demand to upgrade Mettur railway station near Tenkasi
1912025
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி அனைத்து ரயில்களும் நின்று செல்ல உரிய உத்தரவு வழங்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் கடையம் ரயில் நிலையங்களுக்கு இடையே மற்றும் திருநெல்வேலி -கொல்லம் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது மேட்டூர் இரயில் நிலையம் ஆகும். கேரள-தமிழக இணைப்பு இருப்புப்பாதை உருவாக்கபட்ட காலம் முதலே செயல்பட்டுவரும் முக்கிய இரயில் நிலையம் இதுவாகும். இது பாவூர்சத்திரம், கடையம் இரயில் நிலையங்களுக்கு இணையாக லாபம் ஈட்டித் தந்த இரயில் நிலையம் ஆகும். இதனை சுற்றி உள்ள 50 கிராம மக்களின் இரயில் சேவையை இந்த இரயில் நிலையம் பூர்த்தி செய்து வந்தது.
இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு வர்த்தக நோக்கில் பொருட்கள் ஏற்றிச்செல்லும் செயல்பாடு மிகவும் சிறந்து விளங்கியது. அதுமட்டுமன்றி திருநெல்வேலி சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் ஆகிய நகரங்களில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் கட்டண சலுகை பெற்று இந்த வழித்தடத்தில் முறையாக பயணித்து வந்தனர். மேலும் அரசு ஊழியர்களும் மருத்துவம் போன்ற பிற தேவைகளுக்கு திருநெல்வேலி மதுரை செல்லும் பொதுமக்களும் பெரிதும் இதன்மூலம் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் அகல இரயில் பாதை திட்டம் அறிமுகபடுத்தபட்டபோது இந்த இரயில் நிலையம் தரம் குறைக்கப்பட்டு இரண்டு நடைமேடை ஒன்றாக குறைக்கப்பட்டு தற்போது சாதாரண வகை ஒன்றிரண்டு இரயில்கள் மட்டும் நின்று செல்லும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் விரைவு வண்டிகள் இங்கு நின்று செல்லாமல் உள்ளது. அதன் காரணமாக சென்னை, கேரளா, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்ல இரயில் சேவை கிடைக்காமல் இங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் முக்கியத்துவம் குறைந்ததால் இந்த இரயில் நிலையத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து தென்காசி, அம்பரசமுத்திரம் ஆகிய நகரங்களில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணர்கள் கட்டண சலுகை பெற்று இந்த வழித்தடத்தில் முறையாக பயணித்து வந்தனர்.
மேலும் அரசு ஊழியர்களும் மருத்துவம் போன்ற பிற தேவைகளுக்கு திருநெல்வேலி மதுரை செல்லும் பொதுமக்களும் பெரிதும் இதன்மூலம் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் அகல இரயில் பாதை திட்டம் அறிமுகபடுத்தபட்டபோது இந்த இரயில் நிலையம் தரம் குறைக்கப்பட்டு இரண்டு நடைமேடை ஒன்றாக குறைக்கப்பட்டு தற்போது சாதாரண வகை ஒன்றிரண்டு இரயில்கள் மட்டும் நின்று செல்லும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் விரைவு வண்டிகள் இங்கு நின்று செல்லாமல் உள்ளது. அதன் காரணமாக சென்னை, கேரளா, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்ல இரயில் சேவை கிடைக்காமல் இங்கு வசிக்கும் பொதுமக்கள்
மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் முக்கியத்துவம் குறைந்ததால் இந்த இரயில் நிலையத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து தென்காசி, திருநெல்வேலி, மதுரை செல்ல தொலைதூரம் சென்று பேருந்து பயணத்தை மேற்கொள்கின்றனர். வளர்ந்துவரும் நவீனத்துவம் இந்த வட்டார மக்களுக்கு கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர்.
எனவே பெரும்பான்மை மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இந்த இரயில் நிலையத்தை அனைவரும் பயன்படுத்தும் விதமாக மாற்ற இதற்கு முன்பு இருந்தது போல் இரண்டு நடைமேடைகளை உருவாக்கி இந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து இரயில்களும் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பொதிகை, நெல்லை சிலம்பு அதி விரைவு இரயில்களை போன்று இங்குள்ள மக்கள் பயன்படுத்த அம்பாசமுத்திரத்தில் இருந்து கடையம் மேட்டூர் பாவூர்சத்திரம் வழியாக தென்காசி மார்க்கத்தில் தலைநகர் சென்னைக்கு தாமிரபரணி விரைவு இரயில் இயக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு இராம.உதயசூரியன் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி மற்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ எம்பி ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.