குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு – குளிக்க தடை
1 min read
Water inflow increases in Courtallam waterfalls – bathing prohibited
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும் இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும், மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த அருவிகளில் குளிப்பதற்கும் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மலையில் நனைவதற்கும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருகை தருவார்கள்.
இப்போது குற்றாலம் சீசன் காலம் முடிந்து ஐய்யப்ப சீசனும் முடிவடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தென்காசி ,குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.